வீட்டு உபயோக பொருட்கள் தருவதாக ஆன்லைன் மூலம் ரூ.2 லட்சம் மோசடி
நெல்லையில் வீட்டு உபயோக பொருட்கள் தருவதாக ஆன்லைன் மூலம் ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக 2பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை மேலப்பாளையம் ஞானியாரப்பா நகரை சேர்ந்தவர் ரபீக் அகமது. இவரின் மனைவி செய்யது அலி பாத்திமா (வயது 38). இவர் புதுச்சேரியில் ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்து வரும் அப்துல்லா, திராவிட செல்வி என்பவர்களுக்கு தொடர்பு கொண்டு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க ஆர்டர் கொடுத்தார். அப்போது அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் பல தவணைகளாக ரூ.2 லட்சம் வரை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பொருட்களும் வரவில்லை. பணமும் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் அப்துல்லா, திராவிட செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story