ஸ்கூட்டரில் கடத்திச்சென்ற ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஸ்கூட்டரில் கடத்திச்சென்ற ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி
திருச்சி அய்யப்பன் கோவில் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கரி தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் மூட்டைகளுடன் ஒரு வாலிபர் வந்தார். ஸ்கூட்டரை மறித்து அந்த மூட்டைகளை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர், 20 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை கடத்திவந்த புத்தூர் வி.என்.பி.தெருவை சேர்ந்த ஜெயராமனை(வயது 33) கைது செய்த போலீசார், ஸ்கூட்டரையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story