ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x

பாவூர்சத்திரம் பகுதியில் ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, பாவூர்சத்திரம் போலீசுக்கும், தனிப்படை போலீசுக்கும் தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் பாவூர்சத்திரம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பாவூர்சத்திரம் நோக்கி பஞ்சபாண்டியூர் தெற்கு தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் தேவராஜ் (வயது 40) என்பவர் மோட்டார் சைக்கிளில் சாக்கு பண்டல்களுடன் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்தபோது அவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு வந்தது தெரியவந்தது‌.

அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில், இவருடன் சின்னக்குமார்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் ஆனந்த்செல்வன் (25) என்பவரும் சேர்ந்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 23 மூட்டை புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.


Next Story