தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம், தங்க நாணயம் திருட்டு


தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம், தங்க நாணயம் திருட்டு
x
தினத்தந்தி 13 April 2023 1:00 AM IST (Updated: 13 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சூரமங்கலம்:-

சேலம் ஜாகீர் அம்மாபாளையம், காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேஷ் (வயது 48), தச்சு தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் பழனி கோவிலுக்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், ½ பவுன் தங்க நாணயம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இது குறித்து அவர் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு் விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story