ரூ.20 கோடியில் நலத்திட்ட உதவி


ரூ.20 கோடியில் நலத்திட்ட உதவி
x

கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ரூ.20 கோடியில் நலத்திட்ட உதவியை அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் வழங்கினர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் வளாக மைதானத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்பட கண்காட்சியை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவியை வழங்கினர். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டியன், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story