தூத்துக்குடி அருகே தனியார் குடோனில் தீ: இலங்கையில் இருந்து இறக்குமதி செய்த ரூ.20 லட்சம் பழைய காகிதங்கள் சேதம்


தூத்துக்குடி அருகே தனியார் குடோனில் தீ:  இலங்கையில் இருந்து இறக்குமதி செய்த ரூ.20 லட்சம் பழைய காகிதங்கள் சேதம்
x

தூத்துக்குடி அருகே தனியார் குடோனில் தீப்பிடித்து எரிந்ததில், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்து வைக்கப்பட்டு இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பழைய காகித பண்டல்கள் எரிந்து சேதம் அடைந்தன

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே தனியார் குடோனில் தீப்பிடித்து எரிந்ததில், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்து வைக்கப்பட்டு இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பழைய காகித பண்டல்கள் எரிந்து சேதம் அடைந்தன.

காகித பண்டல்

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை நல்லமலை பகுதியில் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் யார்டில் (குடோனில்) சரக்கு பெட்டகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழைய காகிதங்களும் பண்டல்களாக அந்த நிறுவன யார்டில் வைக்கப்பட்டு இருந்தன.

எரிந்து சேதம்

அந்த காகித பண்டல்களில் நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக திடீரென்று தீப்பற்றி எரிந்து உள்ளது. இந்த தீ காற்று காரணமாக மளமளவென பற்றி எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டு இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான காகித பண்டல்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story