மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி
கள்ளக்குறிச்சி பெண் என்ஜினீயரிடம் மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் மோசடி தம்பதி உள்பட 5 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே 100 பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி மகள் தமிழரசி. எம்.இ. படித்துள்ளார். இவருக்கு மின் வாரியத்தில் வேலை தாங்கி தருவதாக கூறி அழகாபுரம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் கணேசன் இவரது மனைவி சாந்தி, மகன் பரத்குமார் மற்றும் இவருடைய நண்பர்களான பார்த்தசாரதி, கேசவன் ஆகிய 5 பேரும் நல்லதம்பியிடம் ரூ.20 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுநாள் வரை வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தியதோடு கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று நல்லதம்பி மனைவி ஜெயஜோதி மேற்படி நபர்களிடம் கொடுத்த பணத்தை கேட்டதற்கு அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தொிகிறது. இது குறித்து ஜெயஜோதி கொடுத்த புகாரின் பேரில் கணேசன், சாந்தி, பரத்குமார், பார்த்தசாரதி, கேசவன் ஆகிய 5 பேர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்