திருச்சி விமான நிலையத்தில் ரூ.20.37 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.20.37 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் ரூ.20.37 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலையில் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் வந்தது. இதைத்தொடர்ந்து விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைத்து 338 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 20.37 லட்சம் ஆகும். இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story