இந்திய கபடி அணியில் இடம் பெற்ற குடியாத்தம் மாணவிக்கு ரூ.25 ஆயிரம் நிதி
இந்திய கபடி அணியில் இடம் பெற்ற குடியாத்தம் மாணவி நேபாள நாட்டில் நடக்கும் போட்டிஷீல் பங்கேற்க செல்வதையொட்டி அமலுவிஜயள் எம்.எல்.ஏ.ரூ.25 ஆயிரம் நிதி வழங்கினார்.
குடியாத்தம்
இந்திய கபடி அணியில் இடம் பெற்ற குடியாத்தம் மாணவி நேபாள நாட்டில் நடக்கும் போட்டிஷீல் பங்கேற்க செல்வதையொட்டி அமலுவிஜயன் எம்.எல்.ஏ.ரூ.25 ஆயிரம் நிதி வழங்கினார்.
குடியாத்தத்தை அடுத்த மோடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. மெக்கானிக். இவரது மகள் சந்தியா (வயது 19) குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் 6-ம் வகுப்பு படிக்கும் போதிருந்தே கபடி விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினார்.
இதனை தொடர்ந்து கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடி போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவின் தேசிய அணிக்கு சந்தியா தேர்வு பெற்றார். அடுத்த மாதம் நேபாள நாட்டில் நடைபெறும் கபடி போட்டிக்கு இந்திய அணி சார்பில் தேர்வு பெற்றுள்ளார்.
தனது குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு நேபாள நாட்டிற்குச் செல்ல தேவையான நிதி உதவி வழங்குமாறு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயனிடம் மாணவி சந்தியா கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் நேற்று குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு மாணவி சந்தியா வரவழைக்கப்பட்டார். அவரிடம் ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை அமலுவிஜயன் எம்.எல்.ஏ.வழங்கினார்.
அப்போது குடியாத்தம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கள்ளூர் ரவி, ஒன்றிய குழு உறுப்பினர் அமுதாலிங்கம், நகர மன்ற உறுப்பினர்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், ம.மனோஜ், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் எம்.முத்து, எம். சத்தியமூர்த்தி, யு.சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.