பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.27 ஆயிரம் வசூல்
கன்னியாகுமரி
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருகிறார்கள். இந்த கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறுவதற்கு கோவிலின் பிரதான நுழைவு வாயிலில் உள்ள மண்டபத்தில் தனியாக திருப்பணி உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்டியல் அடிக்கடி திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவகுமார், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் காணிக்கையாக ரூ.27 ஆயிரத்து 275 வசூலாகி உள்ளது.
Related Tags :
Next Story