13 கல்குவாரிகளை மூட உத்தரவு- 41 குவாரிகளுக்கு ரூ.300 கோடி அபராதம்


13 கல்குவாரிகளை மூட உத்தரவு-  41 குவாரிகளுக்கு ரூ.300 கோடி அபராதம்
x

நெல்லை மாவட்டத்தில் 13 கல்குவாரிகளை மூட உத்தரவு-41 குவாரிகளுக்கு ரூ.300 கோடி அபராதம்

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் மாநில முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல் குவாரிகளும் மூடப்பட்டன. கடந்த 2 மாதங்களாக பாறைகள், ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட் மணல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதே நேரத்தில் விபத்து நடந்த உடன் அனைத்து கல்குவாரிகளிலும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளும் மூடப்பட்டு, கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளால் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கை நெல்லை மாவட்ட கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கும், கனிமவளத்துறைக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 13 கல் குவாரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 41 கல்குவாரிகளுக்கு ரூ.300 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஒரு கல்குவாரி மட்டும் முறையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


Next Story