செல்போன் 'ரீசார்ஜ்' கடைக்காரரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் மீட்பு
முத்துப்பேட்டையை சேர்ந்த செல்போன் ‘ரீசார்ஜ்’ கடைகாரரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.30 ஆயிரத்தை திருவாரூர் சைபர்கிரைம் போலீசார் மீட்டனர்.
முத்துப்பேட்டையை சேர்ந்த செல்போன் 'ரீசார்ஜ்' கடைகாரரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.30 ஆயிரத்தை திருவாரூர் சைபர்கிரைம் போலீசார் மீட்டனர்.
ரீசார்ஜ் கணக்கு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அரபி தெருவை சேர்ந்தவர் சேக்அப்துல்லா (வயது 53). இவர் செல்போன் மற்றும் டி.டி.எச். ஆகியவற்றுக்கு 'ரீசார்ஜ்' செய்யும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது சேக் அப்துல்லாவால் ரீசார்ஜ் செய்யமுடியவில்லை.இதனால் தனது ரீசார்ஜ் கணக்கில் பணம் இல்லை என்று எண்ணிய அவர் ரூ.30 ஆயிரத்து 18-ஐ செலுத்தியுள்ளார். இருப்பினும் அவரால் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை. இதனால் அவர் தன்னுடைய ரீசார்ஜ் முகவரிடம் செல்போனில் பேசியுள்ளார்.
ரூ.30ஆயிரத்து 18 மீட்பு
அதற்கு அந்த முகவா் சரிவர பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து சேக்அப்துல்லா திருவாரூர் சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சேக்அப்துல்லா ரீசார்ஜ் செய்ய வைத்திருக்கும் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்த முடியாத அளவிற்கு செய்துள்ளது தெரிவயவந்தது. உடனே சைபர் கிரைம் போலீசார் அந்த முகவரின் கணக்கை முடக்கி அவரிடம் இருந்து ரூ.30ஆயிரத்து 18-ஐ மீட்டு சேக்அப்துல்லாவிடம் ஒப்படைத்தனர்.