கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.32 லட்சத்தில் திட்டப்பணிகள் தொடக்கம்


கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.32 லட்சத்தில் திட்டப்பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.32 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பேரூராட்சி கோட்டையூரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் மற்றும் கீழப்பாவூர் மைதானம் அருகே ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி) மாவட்ட செயலர் கணபதி, பொதுக்குழு உறுப்பினர் சௌ.ராதா, அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சேர்மதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story