ரூ.4 லட்சம் குட்கா, காருடன் பறிமுதல்


ரூ.4 லட்சம் குட்கா, காருடன் பறிமுதல்
x

கெங்கவல்லியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடமாநில வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

கெங்கவல்லி:

கெங்கவல்லியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடமாநில வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரில் குட்கா கடத்தல்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து மற்றும் போலீசார் நேற்று காலை 5 மணி அளவில் தெடாவூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு, சொகுசு கார் ஒன்றில் இருந்து மூட்டையாக, மூட்டையாக பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டன. இதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

அப்போது கார் முழுவதும் 28 மூட்டைகளில் குட்கா மற்றும் 20 மூட்டைகளில் பாக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் காரில் வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சச்சின் (வயது 22) என்பதும், பெங்களூருவில் இருந்து காரில் பெரம்பலூருக்கு குட்கா கடத்தி செல்வதும் தெரியவந்தது. அதே நேரத்தில் வழியில் தெடாவூரில் மளிகை கடைகளுக்கு குட்காவை இறக்கி கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.கெங்கவல்லியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடமாநில வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

2 பேர் கைது

இதையடுத்து காரில் குட்கா கடத்தி வந்த சச்சினை கைது செய்த போலீசார், அவர் ஓட்டி வந்த கார் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் சச்சினிடம் குட்கா பொருட்களை வாங்கியதாக தெடாவூரில் வீரகனூர் மெயின்ரோட்டில் வசித்து வரும் மளிகை கடைக்காரர் ராஜா (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் சச்சின் எங்கிருந்து குட்காவை கடத்தி வருகிறார் என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வாலிபர் ஓட்டி வந்த கார் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவருடையது என்பதும் தெரியவந்தது. இந்த கார்எப்படி சச்சினிடம் வந்தது என்றும் போலீசார் விசாரித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சச்சின், ராஜா ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story