பாவூர்சத்திரத்தில் ரூ.40 கோடியில் ரெயில்வே மேம்பால பணிகள் தொடக்கம்
பாவூர்சத்திரத்தில் ரூ.40 கோடியில் ரெயில்வே மேம்பால பணிகள் தொடக்க விழா நடந்தது.
பாவூர்சத்திரம்:
நெல்லை - தென்காசி சாலை தற்போது நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தின் ஒரு பகுதியில் உள்ள கடைகள் முதற்கட்டமாக அகற்றப்பட்டன. மேலும் நெல்லை- தென்காசி சாலையின் வடபகுதியிலுள்ள கடைகள், வீடுகள் அகற்றப்பட்டு, அந்த பகுதிகளில் வாறுகால் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நான்கு வழி சாலையில் பாவூர்சத்திரத்தில் மட்டும் ஒரு ெரயில்வே கேட் உள்ளது. இந்த இடத்தில் ெரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்தின் மொத்த நீளம் 900 மீட்டர் ஆகும். ெரயில்வே கேட்டில் கிழக்கு பகுதியில் 450 மீட்டரும் மேற்குப்பகுதியில் 450 மீட்டரும் அளவு கொண்டதாக உள்ளது. இந்த பாலத்தின் மொத்த மதிப்பீடு ரூ.40 கோடி ஆகும். இந்த பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று தமிழ்நாடு சாலை விரிவாக்க பணி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.