தற்கொலை செய்தபேரூராட்சி தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: கனிமொழி எம்.பி. வழங்கினார்


தற்கொலை செய்தபேரூராட்சி தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: கனிமொழி எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் தற்கொலை செய்தபேரூராட்சி தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை கனிமொழி எம்.பி. வழங்கினார்

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடியில் தற்கொலை செய்த பேரூராட்சி பணியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தூய்மை பணியாளர் தற்கொலை

உடன்குடியில் தற்கொலை ெசய்து கொண்ட பேரூராட்சி தூய்மை பணியாளரான புதுக் காலனியைச் சேர்ந்த சுடலைமாடன் (வயது 56) மகள் உமாவிற்கு சாத்தான்குளம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ.6 லட்சம் நிதியுதவியை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். மேலும் சுடலைமாடன் சாவுக்கு காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கலெக்டர் உறுதி அளித்தார்.

கனிமொழி எம்.பி. ஆறுதல்

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அரரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கனிமொழி எம்.பி. புதுக் காலனியில் உள்ள சுடலைமாடன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பேருராட்சியின் சுடலைமாடன் பணிபதி வேட்டின் படி விடுப்பு இருப்பு கணக்கில் ஈட்டிய 240 நாட்கள் மற்றும் சொந்த காரணங்களுக்கான பணி ஈட்டிய 90 நாட்கள் என கணக்கீடு செய்யப்பட்டு அரசு சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் ஆதிதிராவிட நலம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவரது வாரிசான மனைவி தங்கம்மாளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்கும் ஆணையும் எம்.பி. வழங்கினார். அப்போது சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என குடும்பத்தினரும், உறவினர்களும் வலியுறுத்தினர்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில்,

தி.மு.க., வைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக எந்த சலுகையும் அளிக்கப்படாது. அவர்களை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்' என தெரிவித்தார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், துணைத்தலைவர் மீராசிராசுதீன், யூனியன் ஆனணயாளர்கள் ஜாண்சிராணி, பழனிச்சாமி, உடன்குடி பேரூராட்சிதுணைத் தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம்

மேலும், குலசேகரன்பட்டினத்தில் ரூ.10.93 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக்கட்டித்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், குலசேகரன்பட்டினம் ஊராட்சி தலைவர் சொர்ண பிரியாத்துரை, துணைத்தலைவர் கணேசன், உடன்குடி யூனியன் தலைவர் , தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story