காரில் இருந்து மீட்கப்பட்ட ரூ.5 லட்சம் உரியவரிடம் ஒப்படைப்பு


காரில் இருந்து மீட்கப்பட்ட ரூ.5 லட்சம் உரியவரிடம் ஒப்படைப்பு
x

நாட்டறம்பள்ளி அருகே நேற்றுமுன்தினம் நடந்த விபத்தில் சிக்கிய காரில் இருந்து மீட்கப்பட்ட ரூ.5 லட்சத்தை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர்

கார் கவிழ்ந்து பெண் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் இருந்து காஞ்சீபுரத்தில் திருமண முகூர்த்த புடவை வாங்குவதற்காக நேற்று முன்தினம் 5 பெண்கள் மற்றும் டிரைவர் உள்பட 6 பேர் காரில் சென்றனர். நாட்டறம்பள்ளி அருகே பங்களாமேடு பகுதியில் வந்தபோது தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது கார் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் கீர்த்தனா என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் பயணம் செய்த 4 பெண்கள் மற்றும் கார் டிரைவர் பீமாசாரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.5 லட்சம் மற்றும் 2 செல் போன்களை நாட்டறம்பள்ளி போலிசார் பத்திரமாக மீடடனர். பின்னர் இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி நேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

ரூ.5 லட்சம் ஒப்படைப்பு

அதன்பேரில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினரான பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வனிதா செட்டி (வயது 46) மற்றும் குடும்பத்தினர் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம், காரில் இருந்து மீட்கப்பட்ட ரூ.5 லட்சம், வெள்ளி கொலுசு ஆகிய பொருட்களை ஒப்படைத்தார். இதனை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story