இலங்கைக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி - ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு அனுப்பினார்
சட்டசபையில் வாக்குறுதி அளித்தபடி இலங்கைக்கு ரூ.50 லட்சம் நிதியுதவியை ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார்.
சென்னை,
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டுக்கு, தமிழக அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என கடந்த ஏப்ரல் 29-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து தனது குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது அறிவித்தார்.
இந்தநிலையில் சட்டசபையில் அளித்த வாக்குறுதியின்படி, தனது மூத்த மகன் ப.ரவீந்திரநாத் மற்றும் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் வங்கிக்கணக்கில் இருந்து தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சத்துக்கான வரைவோலைகளை (டி.டி.), நிதித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளருக்கு, ஓ.பன்னீர்செல்வம் இன்று அனுப்பி வைத்தார்.
Related Tags :
Next Story