திருவண்ணாமலையில் வேலை வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி


திருவண்ணாமலையில் வேலை வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி
x

ேவலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் ரூ.50 லட்சம் மோசடி நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ேபாலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை

ேவலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் ரூ.50 லட்சம் மோசடி நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ேபாலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகார் மனு

திருவண்ணாமலை தாலுகா கொளக்கரவாடி கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (வயது 68) தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் கூலி வேலை செய்து வருகின்றோம். எங்களுக்கு புதுப்பாளையம் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த கணவன், மனைவி உள்பட 3 பேரின் அறிமுகம் ஏற்பட்டது.

அவர்கள் தங்களை அரசியல் வட்டத்தை சேர்ந்தவர் என்றும், தங்களுக்கு முதல்- அமைச்சர் மற்றும் பிரதமர் வரை பழக்கம் உள்ளது என்றும் கூறினர்.

பின்னர் அவர்கள் எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு போக்குவரத்து அலுவலகத்தில் வேலை, கிராம நிர்வாக அலுவலர், வங்கியில் மேலாளர் வேலை, துப்புரவு தொழிலாளர் வேலை போன்றவற்றை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.2 லட்சம் முதல் ரூ.4½ லட்சம் வரை என எங்களிடம் இருந்து மொத்தமாக சுமார் ரூ.50 லட்சம் வரை அவர்கள் எங்களை ஏமாற்றி மோசடி செய்தனர்.

மோசடியில் ஈடுபட்ட அவர்கள் 3 பேரில் ஒருவர் வெளிநாடு தப்பி செல்வதாக கிடைத்த தகவலின் படி அவரை பிடித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தோம். அப்போது அவர் வேண்டுமென்றே மயங்கி விழுவது போல் நடித்ததால் அவரை போலீசார் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நாங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த புகாரையும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வாங்க மறுத்து வருகின்றனர்.

நடவடிக்கை

எனவே எங்களை ஏமாற்றி வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூ.50 லட்சம் வரை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் பணத்தை திருப்பி தராததுடன் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story