செல்போன் செயலி மூலம் ரூ.56 லட்சம் நூதன மோசடி


செல்போன் செயலி மூலம் ரூ.56 லட்சம் நூதன மோசடி
x

செல்போன் செயலி மூலம் ரூ.56 லட்சம் நூதன மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது.

சென்னை,

சென்னையைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் சியாமளா என்ற பெண்ணிடம், சாட்கரோ என்ற செல்போன் செயலி மூலம் பேசி வந்தேன். அந்த பெண் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பதாக தெரிவித்தார். தான் வேலை பார்க்கும் கம்பெனியில் கேண்டீன் நடத்த அனுமதி பெற்றுத்தருவதாக அந்த பெண் தெரிவித்தார். அதற்கு ரூ.56 லட்சம் முன்பணம் கேட்டு பெற்றார். ஆனால் அந்த பெண் கேண்டீன் நடத்த அனுமதி எதுவும் பெற்றுத்தராமல் ரூ.56 லட்சம் பணத்தையும் மோசடி செய்துவிட்டார். உரிய நடவடிக்கை எடுத்து நான் ஏமாந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சந்தோஷ்குமாரிடம் நூதன முறையில் ரூ.56 லட்சம் மோசடி செய்த பெண்ணின் உண்மையான பெயர் பிரியா (வயது 37) என்றும், அவர் கோவா மாநிலத்தில் வசிப்பதும் தெரியவந்தது. தனிப்படை போலீசார் கோவா சென்று பிரியாவையும், அவரது மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட சக்திவேல் (41) என்பவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இதுபோல் செல்போன் செயலி மூலம் 10 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


Next Story