சேலத்தில் தனியார் வங்கியில் ரூ.6¼ லட்சம் நகைகள் மாயம்-போலீசார் விசாரணை
சேலத்தில் தனியார் வங்கியில் ரூ.6¼ லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகார்
சேலம் மெய்யனூரில் தனியார் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மேலாளர் சிவகுமார், நேற்று முன்தினம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்கள் வங்கியில் நகை பிரிவு துணை மேலாளராக அழகாபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பணியாற்றுகிறார். இவர் 10 நாட்கள் விடுமுறை எடுத்து செல்ல இருந்ததால் அடமான நகைகளை வங்கியில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவரிடம் ஒப்படைத்தார்.
நகைகள் மாயம்
அப்போது அந்த ஊழியர் நகைகளை கணக்கீடும் போது நகை பை ஒன்று குறைவாக இருந்தது. இதில் ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான 130 கிராம் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தி நகைகளை கண்டுபிடித்து தரவேண்டும்.
இ்வ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.
இந்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் வங்கியில் நகைகள் மாயமான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.