ரூ.6.¾ லட்சம் மோசடி செய்தவர் கைது


ரூ.6.¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.6¾ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.6¾ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு வேலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன்(வயது 51). மயிலாடுதுறை அவையம்பாள்புரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் விஜயன்(42).

விஜயன், தனக்கு முக்கிய அரசு அதிகாரிகளிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சிலரிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ரூ.6 லட்சத்து 70 ஆயிரம்

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சின்னப்பன் தனது மகனுக்கு அரசு நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தர வேண்டி விஜயனிடம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் வரை பணம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்டு 2 ஆண்டுகள் கடந்தும் விஜயன் வேலை வாங்கி தராததால் அதிர்ச்சி அடைந்த சின்னப்பன், வேலையில்லாவிட்டாலும் கொடுத்த பணத்தை திரும்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் பணத்தையும் விஜயன் திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதனால் சந்தேகம் அடைந்த சின்னப்பன், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்- இன்ஸ்பெக்டர் முகிலரசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து விஜயன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மோசடி வழக்கு தொடர்பாக பூம்புகாரை சேர்ந்த சந்திரன் என்பவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story