மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.6 லட்சம் திருட்டு


மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.6 லட்சம் திருட்டு
x

திருவையாறு அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.6 லட்சம் திருட்டு போனது.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம், திருவையாறை அடுத்த சிறுபுலியூர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41). விவசாயி. இவர் நேற்று முன்தினம் திருவையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தனது சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.6 லட்சத்தை எடுத்தார். அந்த பணத்தை ஒரு மஞ்சள் பையில் வைத்து தனது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்தார். பின்னர் அவரும் அவரது தந்தை சேகரும் திருவையாறிலிருந்து சிறுபுலியூருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

ரூ.6 லட்சம் திருட்டு

பின்னர் அவர்கள் திருவையாறு-கும்பகோணம் சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு எதிர்புறம் உள்ள ஆட்டோமொபைல்ஸ் கடையில் உதிரி பாகங்கள் வாங்கிவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.6 லட்சம் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்தும் பணம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து திருவையாறு போலீஸ் நிலையத்தில் சுரேஷ் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.




Next Story