ரூ. 6 லட்சத்தில் புதிய மின்மாற்றி


ரூ. 6 லட்சத்தில் புதிய மின்மாற்றி
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் அருகே மேல பெரும்பள்ளத்தில் ரூ. 6 லட்சத்தில் புதிய மின்மாற்றி நிவேதா முருகன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார் அருகே மேலபெரும்பள்ளம் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூம்புகார் மின்வாரிய உதவி பொறியாளர் தினேஷ் வரவேற்றார். இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு மாற்றியை இயக்கி வைத்தார். முடிவில் மின்வாரிய ஆக்க முகவர் சேகர் நன்றி கூறினார்.


Next Story