வேலை வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
வேலை வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
மதுரை
திருமங்கலம்
திருமங்கலம் சோணைமீனா நகரை சேர்ந்தவர் காளீஸ்வரி (வயது 28). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் வாணி. வாணியும், காளீஸ்வரியும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். வாணியின் கணவர் கண்ணன். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து காளீஸ்வரிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 7 லட்சம் வாங்கினார்களாம். ஆனால் அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து காளீஸ்வரி பணத்தை திருப்பி கொடுக்குமாறு பலமுறை கேட்டும் அவர்கள் பணத்தை திரும்பி தரவில்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து காளீஸ்வரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார், கண்ணன், வாணி மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story