மதுரை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் -ராமநாதபுரத்தை சேர்ந்தவரிடம் விசாரணை

மதுரை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் -ராமநாதபுரத்தை சேர்ந்தவரிடம் விசாரணை
x

மதுரை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்தவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மதுரை

மதுரை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்தவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

சோதனை

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் மதுரை விமான நிலையத்திற்கு, விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரபாண்டியன் என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், அவர் கொண்டு வந்த உடைமைகளையும் பரிசோதித்தனர்.

தங்கம் பறிமுதல்

அப்போது டிரில்லிங் மிஷின் கீ எனப்படும் கருவியில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் மற்றும் அலைன் கீ எனப்படும் நவீன ஸ்பானரில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 141 கிராம் இதன் மதிப்பு 7 லட்சம் ரூபாய் என கண்டறியப்பட்டது.

இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் வீரபாண்டியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story