சுயஉதவிக்குழு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி


சுயஉதவிக்குழு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி
x

சுயஉதவிக்குழு நடத்தி வங்கிகளில் கடனாக பெற்று ரூ.70 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சுயஉதவிக்குழு நடத்தி வங்கிகளில் கடனாக பெற்று ரூ.70 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூப்பிரண்டிடம் பெண்கள் மனு

நாகா்கோவில் கீழ புத்தேரி பகுதியை சேர்ந்த வக்கீல் சிவாஜி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டனர். பின்னர் அவா்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

வடசேரி கீழபுத்தேரி பகுதியை சேர்ந்த ஒரு பெண் சுயஉதவிக்குழு நடத்தி வருகிறார். அவர் நடத்தி வந்த குழுவில் கீழ புத்தேரி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து வங்கிகளில் கடன் பெற்றிருந்தோம். இந்த நிலையில் சுயஉதவிக்குழு தலைவி எங்களது கையெழுத்தை பயன்படுத்தியும், எங்களது ஆவணங்களை காட்டி மொத்தம் ரூ.70 லட்சத்தை பல்வேறு வங்கிகளில் கடனாக பெற்றார்.

ரூ.70 லட்சம் மோசடி

ஆனால் அந்த பணத்தை எங்களுக்கு தெரியாமல் அவரது பயன்பாட்டிற்கு எடுத்து கொண்டார். இதற்கிைடயே சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து எங்களுக்கு கடனை அடைக்கும்படி நோட்டீஸ் வந்தது. இதுபற்றி சுயஉதவிக்குழு தலைவியிடம் கேட்டபோது, அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் மோசடி செய்து வங்கிகளில் கடனாக பெற்ற ரூ.70 லட்சத்துடன் அவர் தப்பி சென்று விட்டார்.

இதனால் சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்து எங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே எங்களை ஏமாற்றி ரூ.70 லட்சம் மோசடி செய்த சுயஉதவிக்குழு தலைவி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுதர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் கூடியதால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story