முசிறி முதல் சிங்களாந்தபுரம் வரை உள்ள ஏரிகளில் ரூ.700 கோடியில் நீர் நிரப்பும் திட்டம்


முசிறி முதல் சிங்களாந்தபுரம் வரை உள்ள ஏரிகளில் ரூ.700 கோடியில் நீர் நிரப்பும் திட்டம்
x

முசிறி முதல் சிங்களாந்தபுரம் வரை உள்ள ஏரிகளில் ரூ.700 கோடியில் நீர் நிரப்பும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி

முசிறி முதல் சிங்களாந்தபுரம் வரை உள்ள ஏரிகளில் ரூ.700 கோடியில் நீர் நிரப்பும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

பொதுக்கூட்டம்

முசிறி கைகாட்டியில் தி.மு.க. சார்பில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முசிறி நகர செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார், முன்னதாக நகர் மன்ற உறுப்பினர் வெற்றி சரவணன் வரவேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் ரூ.12 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது, இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 760 மருத்துவமனைகள் திறக்கப்பட்டு செயல்படுகிறது, அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ரூ.ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு இரண்டு ஆண்டுகளில் 1½ லட்சம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம்

வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் மணப்பாறையில் ரூ.3,700 கோடியில் (சிப்காட்) உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. முசிறியில் இருந்து துறையூர் பகுதி சிங்களாந்தபுரம் வரை உள்ள ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்ட பணிகள் ரூ.700 கோடியில் தொடங்கப்பட உள்ளது, புளியஞ்சோலையில் தடுப்பணை கட்டும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாவதி, முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் தா.பேட்டை ஒன்றிய செயலாளர் சேகரன், நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவக்குமார், அரசு வழக்கறிஞர் சப்தரிஷி மற்றும் ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர துணைச் செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.


Next Story