நெரிசலில் சிக்கி இறந்த 4 பேர் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் நிவாரண உதவி
இலவச புடவை வழங்க டோக்கன் கொடுக்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பேர் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் நிவாரண உதவியை கலெக்டர் வழங்கினார்.
வாணியம்பாடி தாலுகா பண்டித ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இலவசமாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்க டோக்கன் வழங்கியது. அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 4 பெண்கள் இறந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, நெரிசலில் இக்கி இறந்த வாணியம்பாடியை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி நாகம்மாள் (60), சண்முகம் மனைவி வள்ளியம்மாள் (65), ஜெமினி மனைவி ராஜாத்தி (62), மணி மனைவி மல்லிகா (70) ஆகியோருக்கு தலா ரூ 2 லட்சமும், காயமடைந்த வள்ளியம்மாள் (80), புஷ்பா (50), எல்ம்மாள் (65) ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவியை கலெக்டர் பாஸ்கர்பாண்டியன், சி.என். அண்ணாதுரை எம்.பி., ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. பொம்மிகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் காசோலையாக வழங்கினார்கள்.