காரில் கடத்தப்பட்ட ரூ.84 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்


காரில் கடத்தப்பட்ட ரூ.84 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்
x

காரில் கடத்தப்பட்ட ரூ.84 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி

மணப்பாறை:

கள்ளநோட்டுகள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் கார் ஒன்றில் அதிக அளவில் கள்ளநோட்டுகள் கடத்தப்படுவதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தங்கசாமி தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது வையம்பட்டியில் உள்ள ஒரு செல்போன் கடை அருகே நின்ற ஒரு சொகுசு காரை சோதனை செய்தனர். இதில் அந்த காரில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.2 ஆயிரம் போன்ற நோட்டுகளுடன் இருந்த மொத்தம் 42 கட்டுகளையும், அந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், காரில் கள்ளநோட்டுகளை கொண்டு வந்தவர்கள் கோவை கே.கே.புதூரை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 52), டிரைவர் கணவாய் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பதும் தெரியவந்தது. மேலும் வையம்பட்டியில் செல்போன் கடை நடத்தி வரும் தங்கவேல் என்பவருக்காக அவர்கள் ரூ.84 லட்சம் கள்ளநோட்டுகளை கொண்டு வந்ததும் தெரியவந்தது. அந்த கள்ளநோட்டுகளை கேரளாவை சேர்ந்த ஒரு சினிமா பட தயாரிப்பாளர் கொடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பார்த்தசாரதி, சதீஷ், தங்கவேல் ஆகியோரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story