உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 95 லட்சம் வருவாய்


உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 95 லட்சம் வருவாய்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:45 AM IST (Updated: 6 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 95 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. 2-வது நாளாக இன்றும் காணிக்ைக எண்ணும் பணி நடைபெறுகிறது.

திண்டுக்கல்

உண்டியல் காணிக்கை


அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்துவதுடன் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் பகுதியில் வைக்கப்பட்ட உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.


அதன்படி கடந்த மாதம் (டிசம்பர்) 15, 16-ந்தேதிகளில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு நேற்று பழனியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. வழக்கமாக கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடக்கும். ஆனால் அங்கு கும்பாபிஷேகத்துக்காக யாகசாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்த பணிக்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் பிரகாஷ், பொன் சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர்.


எண்ணும் பணி


பின்னர் கோவில் பகுதியில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது.


கோவில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


நேற்று உண்டியல் காணிக்கை மூலம் வருவாயாக ரூ. 1 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 39-ம், தங்கத்தாலான பொருட்கள் 475 கிராம், வெள்ளி பொருட்கள் 6,348 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 283 ஆகியவை கிடைத்தது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 2-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.




Next Story