கலைஞரின் நெகிழி இல்லா மதுரை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் ரூ.1 ஊக்கத்தொகை - மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்


கலைஞரின் நெகிழி இல்லா மதுரை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் ரூ.1 ஊக்கத்தொகை - மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
x

கலைஞரின் நெகிழி இல்லா மதுரை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் ரூ.1 ஊக்க தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

மதுரை


கலைஞரின் நெகிழி இல்லா மதுரை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் ரூ.1 ஊக்க தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

சித்திரை திருவிழா

மதுரை மாநகராட்சி கூட்டம், அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி தலைமை தாங்கி பேசினார். அதனை தொடர்ந்து மண்டல தலைவர்கள் பேசினர். அதன்பின் ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களது பகுதி பிரச்சினைகளை பேசினர். அதற்கு அதிகாரிகள் பதிலளித்தனர்.

கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் சண்முகவள்ளி, பாஸ்கரன் ஆகியோர் சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், ஆற்றில் கள்ளழகர் நிகழ்ச்சிக்கு கடந்த காலங்களில் கவுன்சிலர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாஸ் வழங்கப்படவில்லை. இனிவரும் ஆண்டுகளில் கவுன்சிலர்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என்றனர்.

மேலும் கவுன்சிலருக்கு மட்டும் பாஸ் கொடுத்தால் அவருடன் யாரையும் அழைத்து செல்ல முடியாது. கணவன், மனைவியையும், மனைவி-கணவனையும் பிரிந்துதான் நிகழ்ச்சிக்கு செல்ல முடியும். எனவே ஒவ்வொரு கவுன்சிலருக்கும் 2 பாஸ் வழங்க வேண்டும். மாஜிஸ்திரேட்டு, நீதிபதிகளுக்கு 3 பேர் செல்லும் வகையில் பாஸ் தரப்படுகிறது. அதே போல் கவுன்சிலர்களுக்கும் தர வேண்டும் என்றனர். உடனே மேயர் இந்திராணி, நான் கூட இந்தாண்டு திருவிழாவிற்கு செல்லவில்லை. இனிவரும் ஆண்டுகளில் பாஸ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மண்டல தலைவர்கள்

19-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பாபு, கூட்டத்தில் இருந்து எழுந்து நின்று, மதுரை கிழக்கு மண்டலத்தை மேயர் புறக்கணிக்கிறார். எங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று கூறி விட்டு சபையில் இருந்து வெளியேறினார். அ.தி.மு.க. கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் பேசும்போது, ஒவ்வொரு மண்டல கூட்டங்களிலும் முதலில் மண்டல தலைவர்கள்தான் பேசுகின்றனர். அவர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளை சுருக்கமாக சொல்வதில்லை. பொதுகூட்டத்தில் பேசுவது போல் பேசுகின்றனர். இந்த மன்றத்தில் பொதுமக்கள் பிரச்சினைகளை பேசலாம். ஆனால் தனிநபர்களின் பிரச்சினைகளை எல்லாம் பேசுகின்றனர். ஒரு மண்டல தலைவர் பேசும் போது தாத்தா பெயரில் இருக்கும் அனுபவ பட்டாவை, பேரனுக்கு மாற்றமுடியுமா? அதற்கு காலி மனை வரி போட முடியுமா என்று எல்லாம் கேட்கிறார். மண்டல தலைவர்களே அதிக நேரத்தை எடுத்து கொண்டால் கவுன்சிலர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளை எப்படி பேச முடியும். எனவே மண்டல தலைவர் பேசுவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். மேலும் மண்டல தலைவர்கள் பேசி முடித்தவுடன் சபையில் இருந்து வெளியேறி விடுகின்றனர். கூட்டத்தில் மற்ற கவுன்சிலர்கள் பேசுவதை கூட அமர்ந்து கேட்பதில்லை என்றனர்.

ஊக்க தொகை

பின்னர் கூட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்குள் பசுமை பரப்பை 33 சதவீதம் அதிகரிக்க 50 ஆயிரம் எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடுவதற்கான பணி மேற்கொள்ளப்படும். தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியில் கலைஞரின் நெகிழி இல்லா மதுரை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின்படி பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் பெறப்படும். இதற்கு ஒரு பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ஊக்கத்தொகை ரூ.1 வழங்கப்படும். மாநகராட்சியில் தினக்கூலிகளாக பணியாற்றும் 61 வாகன ஓட்டுனர்களுக்கு தினக்கூலியாக ரூ.596 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை ரூ.633 ஆக உயர்த்தப்படுகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story