ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு

ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

நாகையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செல்போன்கள் திருட்டு

நாகை வெளிப்பாளையம் ராமநாயக்க குலத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 30). இவர் பப்ளிக் ஆபீஸ் சாலையில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 4 விலை உயர்ந்த செல்போன்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து ரமேஷ்குமார் நாகை வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து, கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story