குழந்தைகளை வேலையில் சேர்க்கும் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


குழந்தைகளை வேலையில் சேர்க்கும் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளை வேலையில் சேர்க்கும் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர் துறை ஆணையருமான அதுல் ஆனந்த் உத்தரவின்படி மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் அறிவுரையின் பேரில் திருநெல்வேலி தொழிலாளர் இணை ஆணையர் வழிகாட்டுதலின் படி குளிர்பான விற்பனை நிலையம், சூப்பர் மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் மால் ஆகிய இடங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்களா? என நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு (அமலாக்கம்) தலைமையில் சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையத்தில் பணியாற்றுபவர்களுடன் சென்று நாகர்கோவிலில் ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் அவர் கூறுகையில், "14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்த வித பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரினம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது. மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளளப்படும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது தெரியவந்தால் 1098 என்ற எண்ணிலும், 04652-229077 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்".


Next Story