16,820 பயனாளிகளுக்கு ரூ.103 கோடியில் நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
திருப்பத்தூரில் நடந்த விழாவில் 16,820 பயனாளிகளுக்கு ரூ.103 கோடி நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருப்பத்தூரில் நடந்த விழாவில் 16,820 பயனாளிகளுக்கு ரூ.103 கோடி நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா திருப்பத்தூர் டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வரவேற்று பேசினார்.
எம்.பி.க்கள் கதிர்ஆனந்த், சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளை திறந்துவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புதிய பணிகள்
வாணியம்பாடியில் ரூ.2 கோடியே 12 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.4 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் விடுதிக் கட்டிடம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஆம்பூர் தாலுகா சோலூர் கிராமத்தில் ரூ.4 கோடியே 10 லட்சத்து 30 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறுபான்மையினர் நலக்கல்லூரி விடுதிக் கட்டிடம்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.5 கோடியே 70 லட்சம் செலவில் ஆம்பூர், புங்கம்பட்டு நாடு பகுதிகளில் 2 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள், சுந்தரம்பள்ளி, மேற்கத்தியானூர், குரும்பேரி, தோரணம்பதி, பல்லலபள்ளி, கசிநாயக்கன்பட்டி, தோக்கியம், சின்ன பேராம்பட்டு, பேராம்பட்டு, காக்கங்கரை, புலியூர், துத்திபட்டு, வடச்சேரி, வீராங்குப்பம், காரப்பட்டு, புங்கம்பட்டு நாடு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 16 துணை சுகாதார நிலையங்கள், புங்கம்பட்டு நாட்டில் செவிலியர் குடியிருப்பு மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் குடியிருப்பு, புதூர் நாட்டில் மருத்துவ அலுவலர் குடியிருப்பு, பச்சூரில் புறநோயாளிகளுக்கான கட்டிடம், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் திருப்பத்தூர் தாலுகா ஆதியூர் ராவுத்தம்பட்டியில் ரூ.52 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம், நீர்வளத் துறை சார்பில் ஆம்பூர் வண்ணாந்துறையில் மாநில நிதியின் மூலம் கானாற்றின் குறுக்கே ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை என மொத்தம் ரூ.129 கோடியே 56 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 28 பணிகளை திறந்து வைத்தார்.
புதிய பணிகளுக்கு அடிக்கல்
தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் வாணியம்பாடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டும் பணி, சுற்றுலாத் துறை சார்பில் ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மலையில் ரூ.2 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் சாகச சுற்றுலாத்தலம் அமைக்கும் பணி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.6 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் கொடுமாம்பள்ளி, பூங்குளம் மற்றும் விஷமங்கலம் ஆகிய பகுதிகளில் பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள், வாணியம்பாடி வட்டம், கொல்லகுப்பம், கானாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி என மொத்தம் ரூ.13 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ரூ.103 கோடியில் நலத்திட்ட உதவிகள்
அதன்பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவிகள், முதல்-அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் புதிய குடும்ப அட்டைகள், கடனுதவிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தையல் எந்திரம், சலவைப் பெட்டி, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா மற்றும் தையல் எந்திரம், பழங்குடியினர் சாதிச்சான்றுகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் உதவிகள், விசைத்தெளிப்பான் மற்றும் கைத்தெளிப்பான், விவசாய தொழில் முனைவோருக்கான உதவித்தொகை, தென்னங்கன்று, பண்ணைக்குட்டை அமைத்தல், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம் மற்றும் அரவை எந்திரம், சூரிய சக்தி மோட்டார் அமைத்தல், சூரிய சக்தி மின் வேலி அமைத்தல், வங்கிக்கடனுதவி, பால்வளத்துறை சார்பில் ஆவின் பாலகம் அமைத்தல், பால் கறவை எந்திரம், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் விவசாயக் கடன், கல்விக் கடன், தொழில் கடன், சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம், திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஸ்கூட்டர், காது கேட்கும் கருவிகள், தையல் எந்திரங்கள், தொழில் மானிய கடனுதவிகள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் செயற்கைக்கால், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா ஆடுகள், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை, பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன உரிமைப் பட்டா, இலவச வீடு, இருளர் நலவாரிய அட்டைகள், தாட்கோ சார்பில் குழுக்களுக்கு கடன் உதவித்தொகை வழங்குதல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கண்ணொளி காப்போம் திட்டம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உதவிகள், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை, மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகள் வழங்குதல், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பாரத பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உதவிகள் என பல்வேறு துறைகளின் சார்பில் 16,820 பயனாளிகளுக்கு 103 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விழாவில் ஜெகத்ரட்சகன் எம்.பி, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ அமலுவிஜயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயா அருணாசலம், திருமதிதிருமுருகன், சத்தியாசதீஷ்குமார், வெண்மதி முனிசாமி, சங்கீதா பாரி, சுரேஷ்குமார், பேரூராட்சி தலைவர்கள் பூஷாராணி, சசிகலாசூரியகுமார், தமிழரசி வெங்கடேசன், நகரமன்ற தலைவர்கள் சங்கீதாவெங்கடேஷ், காவியா விக்டர், உமாசிவாஜி கணேசன், ஏஜாஜ்அஹமத், துணை தலைவர்கள் ஏ.ஆர்.ஷபியுல்லா, இந்திரா பெரியார்தாசன், எம்.ஆர்.ஆறுமுகம், ஒன்றியக்குழு துணை தலைவர்கள் டி.ஆர்.ஞானசேகர், மோகன்குமார், கா.ஸ்ரீதேவி, பூபாலன், சாந்தி சீனிவாசன், தேவராஜ், பேரூராட்சி துணை தலைவர்கள் ம.ஸ்ரீதர், கோவிந்தராஜ், ஆர்.தனபால், அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன், துணை தலைவர் நர்மதா நந்தகோபால், வாணியம்பாடி நகர செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார், திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன், ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பு என்கிற அன்பழகன், பேராம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் குலோத்துங்கன், திருப்பத்தூர் கூட்டுறவு சங்க தலைவர் ராஜா என்கிற சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பிரியதர்ஷினி ஞானவேலன், வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.