சேலம் கோட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் ரெயில் பயணிகளிடம் ரூ.15½ கோடி அபராதம் வசூல்


சேலம் கோட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் ரெயில் பயணிகளிடம் ரூ.15½ கோடி அபராதம் வசூல்
x

சேலம் கோட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் ரெயில் பயணிகளிடம் ரூ.15½ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் ரெயில்வே கோட்டம் வழியாக செல்லும் ]ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் முறைகேடுகளை தடுக்க சோதனை நடத்த ரெயில்வே கோட்ட மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பேரில் சேலம் ெரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2022- 23-ம் நிதியாண்டில் ரெயில் பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்கள், முறையான டிக்கெட் இன்றி, உயர் வகுப்பில் பயணம் செய்தவர்கள், தகுந்த கட்டணம் செலுத்தாமல் லக்கேஜ் கொண்டு சென்றவர்கள் என கண்டறியப்பட்டு அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.15.57 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. இது அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.11.27 கோடியுடன் ஒப்பிடுகையில், ரூ.4 கோடியே 29 லட்சம்கூடுதலாகும்.

அதாவது 38.12 சதவீதம் கூடுதலாகும். இதுபோன்று தகுந்த கட்டணம் செலுத்தாமல் ரெயில்களில் லக்கேஜ் கொண்டு சென்றது, உரிய கட்டணத்தை விட, கூடுதல் அளவுக்கு லக்கேஜ் கொண்டு சென்றது என 558 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.55 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக சேலம் ரெயில்வே கோட்டம் கடந்த நிதியாண்டில் டிக்கெட் பரிசோதனை மூலமாக மொத்தம் ரூ.15.57 கோடி அபராதம் வசூலித்துள்ளது.


Next Story