மேட்டூர் கிரானைட் வியாபாரியிடம் ரூ.1.98 லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை


மேட்டூர் கிரானைட் வியாபாரியிடம் ரூ.1.98 லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x

மேட்டூர் கிரானைட் வியாபாரியிடம் ரூ.1.98 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

கிரானைட் வியாபாரி

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 40 வயதுடையை ஒருவர் கிரானைட் கல் கடை நடத்தி வருகிறார். அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மர்ம நபர் ஒருவர், தான் ஆந்திராவில் பெரிய அளவில் கிரானைட் கல் கடை நடத்தி வருவதாக தெரிவித்தார். இதை நம்பிய அவர் மர்ம நபரிடம் 20 டன் கிரானைட் கல்லுக்கு ஆர்டர் கொடுத்தார்.

அதற்காக மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்கு மற்றும் ஆன்லைன் மூலம் அவர் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 988 செலுத்தினார். இதனிடையே சேலத்தில் கிரானைட் கல் கடை நடத்தி வரும் ஒருவர், மேட்டூரை சேர்ந்த அந்த வியாபாரிக்கு போன் செய்து 3,500 சதுரடி கிரானைட் கற்களை அனுப்பி உள்ளதாகவும், அதற்கான பணத்தை அனுப்புமாறும் கூறினார்.

விசாரணை

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மேட்டூர் வியாபாரி, மர்ம நபரின் செல்போன் எண்ணுக்கு உடனடியாக தொடர்பு கொண்டார். ஆனால் அது `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் மர்ம நபர் மேட்டூர் வியாபாரியிடம் பணத்தை வாங்கி கொண்டு சேலத்தில் கிரானைட் கல் கடை நடத்தி வரும் நபரிடம் ஆர்டர் கொடுத்து அனுப்பி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story