ராதாபுரம் அருகே ரூ.2 கோடி கோவில் நிலம் மீட்பு
ராதாபுரம் அருகே ரூ.2 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது.
திருநெல்வேலி
ராதாபுரம்:
ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர் நித்திய கல்யாணி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. அந்த நிலங்கள் பல வகையான தொழில்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. சவுந்திரபாண்டியபுரம் வருவாய் கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான 144 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்ய கோவில் நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலம் அளவீடு செய்யப்பட்டு, கோவிலுக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தை பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செயல் அலுவலர் பொன்னி தெரிவித்தார்.
Related Tags :
Next Story