கீழப்பாவூர் பகுதியில் ரூ.20 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி


கீழப்பாவூர் பகுதியில் ரூ.20 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூர் பகுதியில் ரூ.20 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சியில் 2022-23-ம் வருட பொதுநிதி திட்டத்தின் கீழ் வணிகர் கீழத்தெரு, உடையார்கோவில் தெரு, சங்கரநாராயணபுரம் தெற்கு தெரு, சாமி கோவில் தெரு, யூனியன் ரோடு மற்றும் ஆலங்குளம் ரோடு பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு துணைத்தலைவர் கே.ராஜசேகர், செயல் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்.அறிவழகன், பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story