ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம்
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் கோபி கணேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஏ.ஆர்.எஸ்.மதியழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. மயிலாடுதுறை மாவட்டத்தை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், பகுதி பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும். இந்த நிவாரண உதவியை மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story