2 கல்குவாரிகளுக்கு ரூ.31 கோடி அபராதம்


2 கல்குவாரிகளுக்கு ரூ.31 கோடி அபராதம்
x

ராதாபுரம் அருகே விதிமுறையை மீறி செயல்பட்ட 2 கல்குவாரிகளுக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருநெல்வேலி

ராதாபுரம் அருகே விதிமுறையை மீறி செயல்பட்ட 2 கல்குவாரிகளுக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

அதிகாரிகள் ஆய்வு

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் நடைபெற்ற கல்குவாரி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து கனிம வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் மாவட்டம் முழுவதும் உள்ள கல்குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டது.

விதிமீறல்

இந்த நிலையில் ராதாபுரம் தாலுகா இருக்கன்துறையில் உள்ள கல்குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், 2 குவாரிகளில் அரசு விதித்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் நீர்நிலைகளையும், புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து, அரசு விதித்த ஆழத்திற்கு அதிகமாக கனிமவளம் வெட்டி எடுத்ததாகவும், அரசு அனுமதி வழங்காத வேறு நிலங்களில் கனிமவளத்தை வெட்டி எடுத்ததாகவும், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து கல்குவாரிகளின் உரிமையாளர்களான வடக்கன்குளத்தை சேர்ந்த சபரீஷ்லால் மற்றும் அஜேஷ்லால் ஆகிய 2 பேருக்கும் தமிழக அரசு சுமார் ரூ.31 கோடி அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த அபராத தொகையை செலுத்த தவறினால் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.


Next Story