ரூ.4 லட்சம் மோசடி; ராணுவ வீரர் மீது வழக்கு


ரூ.4 லட்சம் மோசடி; ராணுவ வீரர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரூ.4 லட்சம் மோசடி செய்த ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி முத்தமிழ் (வயது 39). செந்தில்குமாரிடம் விழுப்புரம் பெரியார் நகரில் வசித்து வரும் மற்றொரு செந்தில்குமார் சென்று சென்னையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய கீழ்பெரும்பாக்கம் செந்தில்குமார், தனது வங்கி கணக்கு மூலம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரமும், கூகுள்பே மூலம் ரூ.80 ஆயிரமும் என மொத்தம் ரூ.4 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தைப்பெற்ற பெரியார் நகர் செந்தில்குமார், இதுவரை அசல், லாபம் என எந்த பணமும் தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து முத்தமிழ், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பெரியார் நகர் செந்தில்குமார் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் நகர் செந்தில்குமார் தற்போது இந்திய ராணுவத்தில் சென்னை பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story