மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சம் வட்டி இல்லா கடன்
நீலகண்டராய பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சம் வட்டி இல்லா கடன் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த நீலகண்ட ராயப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சம் வட்டி இல்லா கடன் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் டி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் சேதுபதி முன்னிலை வகித்தார்.
கோடியூரை சேர்ந்த தினகரன், சஹானா, கேசவனாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் வெங்கடேசன் உள்பட 8 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் விதம் ரூ.4 லட்சம் சுயதொழில் செய்வதற்காக வட்டி இல்லாத கடனாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story