டாம்கோ மூலம் ரூ.44½ லட்சம் மதிப்பீட்டில் சிறுபான்மையினருக்கு கடனுதவி


டாம்கோ மூலம் ரூ.44½ லட்சம் மதிப்பீட்டில் சிறுபான்மையினருக்கு கடனுதவி
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டு சிறுபான்மையினர் மக்கள் பயனடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டு சிறுபான்மையினர் மக்கள் பயனடைந்துள்ளனர்.

புதிய திட்டங்கள்

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் வாயிலாக புதிய பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். சமுதாயத்தில் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முக்கியத்துவம் அளித்து வருகின்றார்.

சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நலன்களில் அவர்களுக்குரிய பங்கீடு கிடைப்பதை உறுதிசெய்வதில் தமிழ்நாடு மாநிலமானது நாட்டிற்கே முன்னோடியாக விளங்குகிறது. சமுதாயத்தில் பல்வேறு பிரிவினரிடையே மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு செயல்படுகின்றது.

கடனுதவி

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள் மற்றும் சமணர்கள் ஆகியோர்கள் பயன் பெறும் வகையில் சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகள் வழங்கி வருகிறது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2022-23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தற்போது வரையில் 5 மகளிர் குழுக்களைச் சார்ந்த 78 பயனாளிகளுக்கும், 2 தனிநபர்களுக்கும் ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டு சிறுபான்மையினர் மக்கள் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு கூறப்பட்டிருந்தது.



Next Story