பெண்ணிடம் ரூ.44 ஆயிரம் 'அபேஸ்'


பெண்ணிடம் ரூ.44 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 6 Oct 2022 10:30 PM IST (Updated: 6 Oct 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரத்தில் பெண்ணிடம் வங்கி ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.44 ஆயிரம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

அல்லிநகரம் மண்டு கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரா (வயது 58). இவரது வீட்டில் தனது வங்கி கணக்கின் ஏ.டி.எம். கார்டை வைத்திருந்தார். அதனை யாரோ மர்ம நபர் திருடி சென்றார். அந்த ஏ.டி.எம். கார்டுடன், அவர் ரகசிய எண்ணையும் குறித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த கார்டை பயன்படுத்தி சந்திராவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.44 ஆயிரத்தை அந்த மர்ம நபர் 'அபேஸ்' செய்துவிட்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் சந்திரா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story