ரூ.48.81 லட்சம் சாலை பணிகள் தொடக்கம்
ரூ.48.81 லட்சம் சாலை பணிகள் தொடங்கப்பட்டன.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் கோடங்குடி கிராமத்தில் இருந்து சோழமாதேவி செல்லும் மண் சாலையை விவசாய பயன்பாடுகளுக்காக மெட்டல் சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் துவங்கப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் 2022-23, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22, 2022-23 திட்டங்களின் கீழ் ரூ.48 லட்சத்து 81 ஆயிரம் திட்ட மதிப்பில் சாலை பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் தலைமையேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம் (வட்டார ஊராட்சி), விஸ்வநாதன் (கிராம ஊராட்சிகள்), உதவி பொறியாளர் சுமதி இளநிலை பொறியாளர் சரோஜினி கோடங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா நடராஜன் துணைத் தலைவர் சுமதி மதியழகன் ஊராட்சி செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.