ரூ.5½ லட்சம் குட்கா- 2 கார்கள் பறிமுதல்


ரூ.5½ லட்சம் குட்கா- 2 கார்கள் பறிமுதல்
x
சேலம்

ஓமலூர்:-

பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5½ லட்சம் குட்கா மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தாபா ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

தாபா ஓட்டல்

ஓமலூரை அடுத்த காமலாபுரம் பிரிவு ரோடு அருகே பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த சங்கர் சிங் ஜாட்வால் மகன் மான்சிங் (வயது 34).

இவர், கடந்த 12 ஆண்டுகளாக ராஜஸ்தானி என்ற பெயரில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், பெங்களூருவில் இருந்து 3 காரில் சேலத்திற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

2 கார்கள் பறிமுதல்

அதன்பேரில் போலீசார் காமலாபுரம் பிரிவு ரோடு அருகே உள்ள ராஜஸ்தானி ஓட்டல் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒரு கார் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. 2 காரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அந்த காரை சோதனை செய்த போது அதில் மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த 2 காரையும் பறிமுதல் செய்தனர்.

கைது

பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு குட்கா கடத்தி வரப்பட்டது தொடர்பாக தாபா ஓட்டல் உரிமையாளர் மான்சிங்கை கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட ரூ.5½ லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ரூ.9 லட்சம் மதிப்பிலான 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story