ரூ.50 லட்சம் மதிப்பில் உயர்மின் விளக்குகள் அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

ரூ.50 லட்சம் மதிப்பில் உயர்மின் விளக்குகள் அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
x

ரூ.50 லட்சம் மதிப்பில் உயர்மின் விளக்குகளை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

ரூ.50 லட்சம் மதிப்பில் உயர்மின் விளக்குகளை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை-திண்டிவனம் சாலை மற்றும் செங்கம் சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் சாலை மத்தியில் உள்ள தடுப்புகளில் உயர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து உயர் மின்விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., தி.மு.க. மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகரச் செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், அருணை கன்ஸ்ட்ரக்‌ஷன் துரை வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story