விவசாயிகள் மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.50 ஆயிரம் மானியம்


விவசாயிகள் மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.50 ஆயிரம் மானியம்
x

மேலூர் பகுதியில் விவசாயிகள் மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை துறை தகவல் ெதரிவித்துள்ளது.

மதுரை

மேலூர்,

மேலூர் விநாயகபுரத்தில் அமைந்துள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் புவனேஸ்வரி கூறி இருப்பதாவது:-

மேலூர் தாலுகாவில் 2023-24-ம் ஆண்டின் கீழ் தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்களுக்கு பொருள் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது தோட்டத்தில் மண்புழு உரக்கூடம் அமைத்து மண்புழு உரம் தயாரிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு மண்புழு உரக்கூடம் அமைக்க தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய தொகையாக ரூ.50 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளத்தில் விவசாயிகள் தங்களது பெயர், முகவரி, ஆதார் எண் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் திட்ட இனங்களை இணையதளத்தின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேலூர் விநாயகபுரத்தில் அமைந்துள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story