ரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; கொத்தனார் கைது
சிறுகனூர் அருகே ரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
சிறுகனூர் அருகே ரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் தச்சங்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்த தச்சங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிராஜ் (வயது 32) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் கொத்தனார் என்றும், காரில் புகையிலை பொருடகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா (40) உதவியுடன் ராஜஸ்தான், பெங்களூரு புகையிலை பொருட்களை வாங்கி பதுக்கி வைத்து கிராமங்களில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
40 மூட்டை புகையிலை பொருட்கள்
இதைத்தொடர்ந்து, மணிராஜின் ஆட்டுகொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள சுமார் 40 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து மணிராஜை கைது செய்தனர். இதில் தொடர்புடைய இளையராஜாவை தேடி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராசாம்பாளையம் என்ற இடத்தில் அனாதையாக நின்ற ஒருகாரில் ஒரு லட்சம்மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் வாகன சோதனைக்கு பயந்து ஒருகும்பல் அதனை அங்கு விட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.